தேசிய கட்சியில் இணைந்த இசையமைப்பாளர் பரத்வாஜ்

தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் கட்சி ஆரம்பிக்கும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் அவர்கள் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். இன்று காலை மத்திய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து தன்னை பாஜகவின் அவரை இணைத்துக் கொண்டார். மேலும் பாஜகவின் உறுப்பினர் அட்டையும் அவர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த இணைப்பின் போது ஏற்கனவே பாஜகவில் இணைந்து செயலாற்றி வரும் இசையமைப்பாளர் கங்கை அமரன் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நமீதா மற்றும் ராதாரவி பாஜகவில் இணைந்தனர் என்பதும் இன்னும் சிலர் பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply