shadow

குரல் கொடுக்காத ரஜினி ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? பாரதிராஜா

தமிழகத்தில் எந்தவொரு பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே அனைத்து கட்சிகளும் ஒரு அறிக்கை, ஒரு ஆர்ப்பாட்டம், ஆகியவற்றை வெளியிட்டு நாங்களும் குரல் கொடுத்துவிட்டோம் என்று பதிவு செய்து கொள்கின்றன. அதோடு அந்த பிரச்சனையை மறந்துவிடுவதும் வாடிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த பிரச்சனைக்கு நாங்கள் குரல் கொடுத்தோம், ரஜினி ஏன் குரல் கொடுக்கவில்லை என்பதையும் கூறி வருகின்றன. ஒரு பிரச்சனைக்கு குரல் கொடுத்துவிட்டால் மட்டும் அந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுவிடுமா? என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில் எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்காத ரஜினி ஏன் அரசியலுக்கு வருகிறார் என்று இயக்குனர் பாரதிராஜா வழக்கம் போல் புலம்பலுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் யாரும் கொல்லைப்புறம் வழியாக உள்ளே நுழைய முடியாது. தமிழர்களுக்குள் மத வழிபாட்டு முறைகள் வெவ்வேறாக உள்ளன. தமிழர்கள் சிதறுண்டு கிடக்கிறார்கள்.

நாம் ஒன்றுபட்டு இருந்தால் எச்.ராஜா போன்றவர்கள் இப்படி பேச முடியுமா? நாளை தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் யாரும் உள்ளே வர முடியாது.

பெரியாரை பற்றி பேசும் அளவுக்கு பலருக்கும் தைரியம் வந்ததற்கு காரணம் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாததுதான்.

ஜெயலலிதா துணிச்சலானவர். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்வார். வைரமுத்தோ, பாரதிராஜாவோ தனி மனிதர்கள் அல்ல. வைரமுத்துவை தொட்டால் வைகையை தொட்டது போல் அர்த்தம்.

எனவே தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பேசுபவர்கள் கர்நாடகத்தில், கேரளாவில் போய் பேச முடியுமா?

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கூட சொல்லாத ரஜினி ஏன் தமிழக அரசியலுக்கு வருகிறார்? அவருக்கு தமிழகத்தின் நிலப்பரப்பை பற்றி தெரியாது. தமிழகத்தின் வருமானம், கடன் தெரியாது. பிறகு எதற்காக ரஜினி அரசியலுக்கு வருகிறார்? இவ்வாறு அவர் பேசினார்.

Bharathiraja says rajini why come to politcs

Leave a Reply