shadow

‘ரெமோ’ இயக்குனரின் அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயன்?

remo-2சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தை இயக்கி முடித்துள்ள பாக்யராஜ் கண்ணனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி நேற்று தயாராகி தயாரிப்பாளரும் படக்குழுவினர்களும் பார்த்தனர். படம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்திருப்பதாக பாராட்டிய தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, தனது நிறுவனத்திற்காக மீண்டும் ஒரு படத்தை இயக்கி தரும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே தான் ‘ரெமோ 2’ குறித்து ஐடியா வைத்திருப்பதாகவும், அந்த படத்தையே அடுத்தபடமாக திட்டமிட்டுள்ளதாகவும் பாக்யராஜ் கண்ணன் கூற அதற்கு தயாரிப்பாளரும் ஒப்புக்கொண்டாராம். எனவே பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பார் என தெரிகிறது.

இந்நிலையில் ரெமோ படத்தின் இசை வெளியீடு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Leave a Reply