bhagyaraj-files-a-complaint-on-santhanam-again-700x473

சந்தானம், பவர்ஸ்டார் சீனிவாசன் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தின் கதை தன்னுடைய ‘இன்று போய் நாளை வா’ திரைப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்றும், தன்னிடம் அனுமதி வாங்காமலேயே சந்தானம் தன்னுடைய கதையை பயன்படுத்தியதாகவும், இயக்குனர் கே.பாக்யராஜ் கடந்த வருடம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து சந்தானம் மற்றும் கே.பாக்யராஜ் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் கே.பாக்யராஜ் ஒரு பெரிய தொகையை நஷ்ட ஈடாக கேட்டதால், சந்தானம் அதற்கு உடன்படவில்லை. இதனால் வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளது.

இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து இயக்குனர் கே.பாக்யராஜ் மீண்டும் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில் தன்னுடைய முந்தைய புகாரை சரிவர போலீஸார் விசாரணை செய்யவில்லை தனது புகாரின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மீண்டும் ஒரு புகாரை கொடுத்துள்ளார்.

பாக்யராஜ் கேட்கும் நஷ்ட ஈடு தொகையை கொடுக்க தயாரில்லை என்றும் வழக்கை சட்டப்படி சந்திக்க உள்ளதாகவும் சந்தானம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *