Chennai Today News

உலகக்கோப்பை கால்பந்து: பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்ற பெல்ஜிஅம்

உலகக்கோப்பை கால்பந்து: பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்ற பெல்ஜிஅம்

உலகக்கோப்பையை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த முதல் போட்டியில் பிரான்ஸ் அணி உருகுவே அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அதேபோல் நேற்று நடந்த இரண்டாவது காலிறுதி போட்டியில் பெல்ஜியம் அணி, பிரேசில் அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

காலிறுதியில் வெற்றி பெற்ற பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் வரும் 10ஆம் தேதி அரையிறுதியில் மோதவுள்ளன. அதேபோல் இன்று நடைபெறவுள்ள காலிறுதி போட்டியில் ரஷ்யா மற்றும் குரோஷியா அணிகளும், ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோதவுள்ளன.

நேற்றைய பிரேசில்-பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 13வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா ஒரு கோலும், அதன்பின்னர் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்தும் தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!