Chennai Today News

உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு தகுதி பெற்ற பிரேசில்-பெல்ஜியம்

உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு தகுதி பெற்ற பிரேசில்-பெல்ஜியம்

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தற்போது நாக் அவுட் சுற்றுகள் நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பெல்ஜியம் மற்றும் பிரேசில் அணிகள் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றன.

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பிரேசில் அணி மெக்சிகோ அணியை 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. அதேபோல் இன்னொரு போட்டியில் பெல்ஜியம் அணி, ஜப்பான் அணியை 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.

இதனையடுத்து இதுவரை உருகுவே, பிரான்ஸ், ரஷ்யா, குரோஷியா, பிரேசில், பெல்ஜியம் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளும் காலிறுதியில் விளையாடும்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!