இதுக்கு பேர்தான் உங்க ‘டக்கா’?
சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக KDM ரிலீஸ் செய்யாததால் இந்த அதிகாலை சிறப்பு காட்சி மற்றும் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்பட்டு இன்று மதியம் 12 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில் படம் இன்னும் ஒரு காட்சி கூட ஆரம்பிக்காத நிலையில் இந்த படத்திற்கு பிரிட்டனில் உள்ள ஒரு அவசரகுடுக்கை ரசிகர் இணையதளத்தில் விமர்சனம் பதிவு செய்துள்ளார்
இந்த விமர்சனத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ள பிரிட்டன் விநியோகிஸ்தர் ‘இந்த படத்தின் பிரிட்டன் விநியோகிஸ்தர் நான் தான். என்னுடைய அனுமதியில்லாமல் எப்படி படம் திரையிடப்பட்டிருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த காரசாரமான விவாதங்கள் இணையதளத்தில் நடந்து வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.