shadow

ஜெர்மனியில் பீர் திருவிழா தொடக்கம். 1 கோடி லிட்டர் பீர் விற்பனை?

shadow

ஜெர்மனி நாட்டில் ஒவ்வொரு வெகு சிறப்பாக நடைபெறும் பீர் திருவிழா, இந்த ஆண்டு நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த விழாவில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற பீர் திருவிழாவில் 65 லட்சம் லிட்டர் ‘பீர்’ விற்பனையானதை அடுத்து இந்த ஆண்டு ஒரு கோடி லிட்டர் பீர் விற்பனை செய்ய வேண்டும் என பீர் பேக்டரி உரிமையாளர்கள் சபதம் செய்துள்ளனர். மேலும் இந்த திருவிழாவில் ‘பீர்’ மட்டுமின்றி பீருடன் ‘பிராதென்டல்’ என்னும் ஒருவகை சிக்கன் உணவும் முக்கியத்துவம் பிரபலம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த திருவிழாவுக்காக லட்சக்கணக்கான கோழிகள் சமையல் உணவாக பரிமாறப்படும்

இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு புதியதாக 128 உணவு கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. சாதாரண நாட்களில் விற்பதை விட திருவிழா நாட்களில் பீர் விலை அதிகரித்து காணப்படும்.  ‘மாஸ்’ எனப்படும் பெரிய குடுவை பீர் 10 யூரோ என விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த பீர் திருவிழாவை ஒட்டி ஜெர்மனி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் 5 பீர் , 10 பீர் என குடித்து போதையில் இருப்பார்கள் என்பதால் இந்த விழாவை கண்காணிக்க 13 ஆயிரம் பேர் அமைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply