சிம்பு-அனிருத் விவகாரத்தால் தனுஷுக்கு வந்த சிக்கல்?

dhanush and anirudhபீப் பாடல் விவகாரத்தில் அனிருத்தும் சிம்புவும் காவல்துறை வழக்கில் சிக்கியுள்ள நிலையில் அனிருத் இசையமைத்த படங்கள் வெளியாவதிலும் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

பீப் பாடலுக்கு பெண்கள் அமைப்பு மட்டுமின்றி திரையுலகினர்களும், பாடலாசிரியர்களும், எழுத்தாளர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இருவரையும் தூக்கில்போட வேண்டும் என்று கூட ஒருசில ஆவேசமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்போதைக்கு சிம்புவின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் அனிருத் இசையமைத்த ‘தங்கமகன்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘தங்கமகன்’ படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீறி வெளியிட்டால் ‘தங்கமகன்’ திரையிடப்படும் தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இதனால் தயாரிப்பாளர் தனுஷ் உள்பட ‘தங்கமகன்’ படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

English Summary: Beep song protestors protest against ‘Thanga magan?

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *