shadow

பீப் பாடல் எதிரொலி: வாய்ப்புகளை இழக்கும் சிம்பு
simbu
சிம்பு பாடிய பீப் பாடலில் பெண்களை அவமதிக்கும் வகையில் ஆபாச வார்த்தை ஒன்றை சேர்த்து பின்னர் அது பீப் செய்யப்பட்டிருக்கும் விவகாரம் தற்போது சூடுபிடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலால் திரையுலகினர்களின் கண்டனத்தை பெற்று வரும் சிம்பு, தனக்கு கிடைத்த வாய்ப்புகளையும் இழந்து வருகிறார். இப்படியே போனால் சிம்புவை கோலிவுட் திரையுலகம் விலக்கி வைக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படம் பல மாதங்களாக வெளியாகாத நிலையில் கான், வேட்டை மன்னன், அமீர் இயக்கத்தில் உருவாகவிருந்த படம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருந்த படம் என பல வாய்ப்புகளை இழந்துவிட்ட சிம்புவை இனிமேல் புதிய படத்தில் நடிக்க வைக்க முன்னணி இயக்குனர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.

நடிகர் சங்கத்தேர்தலின் போது தேவையில்லாத ஒருசில வார்த்தைகளை சிம்பு கொட்டியதால் தற்போதைய நடிகர் சங்கத்தில் இருந்தும், முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் இருந்தும் சிம்புவுக்கு எந்த ஆதரவும் வரவில்லை. மேலும் ‘வாலு’ படத்தை வெளியிட உதவி செய்த விஜய்யும், சிம்புவின் தலைவர் என்று கூறப்படும் அஜித்தும் சிம்புவை ஒதுக்க தீர்மானித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஒரே ஒரு பாடல் சிம்புவின் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டதாக கோலிவுட்டில் தற்போது பரபரப்புடன் பேச்சு அடிபடுகிறது. இந்த சிக்கலில் இருந்து சிம்பு மீண்டுவர வெகுகாலம் ஆகும் என கருதப்படுவதால் சிம்புவின் எதிரிகள் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply