21

அதிக உடையும் குறைந்த உடையும் பெண்கள் பொதி சுமப்பது போல உடல் முழுவதும் சுற்றிய நிலையில் அதிகமான அளவில் உடை அணிவது அழகைக் கெடுக்கும். அதற்காக அங்கங்கள் தெரியும் அளவுக்கு மிகவும் குறைவான ஆடைகளை அணியக் கூடாது.

கடைத் தெருவுக்குப் போகும்போதுகடைத்தெரு மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது இலேசான நிறத்தில் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது சூழ்நிலைக்கு ஏற்ப பாந்தமாக இருக்க வேண்டும்.

புடவைக்குப் பொருத்தமான சோளிகள் பெண்கள் அணியக்கூடிய சோளிகளின் கைகளிலும், கழுத்திலும் லேஸ்களை வைத்துத் தைத்துக் கொண்டால் அவை என்ன வண்ணத்தில் புடவை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும். பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது.

புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின அவர் தோற்றத்தையே அது மாற்றி விடும். உதாரணமாக பெண்கள் அணியக்கூடிய புடவையில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் அமைந்தால் உயரமான பெண்கள் குள்ளமாக இருப்பது போன்ற பிரமை பார்ப்பவர்களுக்கு தோன்றும்.

புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயரமாக இருப்பது போல காட்சி தருவார்கள். அலுவலங்களுக்கோ, பள்ளி, கல்லூரிகளுக்கோ செல்லும் பெண்கள் மிகவும் பகட்டாகவும் கண்களைப் பறிக்கும் விதத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.

கண்ணியமான தோற்றத்தை அளிக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ற உடையை அணிந்து செல்வது மிகவும் அவசியம். மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது. சோளியின் கைகள்கூட மிகவும் பிடிப்பாக இல்லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது.

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *