shadow

22-1-curd

ஒவ்வொருவருக்கும் தாங்கள் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுப்போம். குறிப்பாக பலர் அழகு நிலையங்களுக்குச் சென்று நிறைய பணம் செலவழித்து தங்களின் அழகைப் பராமரிப்பார்கள். அழகைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வீட்டிலேயே உங்கள் சமையலறையில் உள்ளது. அதில் ஒன்று தான் தயிர். வயிற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் தயிரை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால் எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். இப்போது அந்த தயிரை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

  • வறட்சியான கூந்தலைப் போக்க… தயிரைக் கொண்டு வாரம் இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், கூந்தல் வறட்சியானது நீங்கும். அதிலும் தயிருடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஹேர் மாஸ்க் போட்டால், கூந்தல் பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்.

 

  • சரும கருமையைப் போக்க… தினமும் வெறும் தயிரை முகம் மற்றும் சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், வெயிலால் கருமையடைந்த சருமத்தை வெண்மையாக்கலாம்.
  • பருக்களை நீக்க… தயிரை கடலை மாவுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.
  • பொடுகைத் தடுக்க… தலையில் பொடுகு அதிகம் இருந்தால், தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, வாரம் இரண்டு முறை தலைக்கு தடவி வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
  • கரடுமுரடான முடியை சரிசெய்ய… குளிர்காலத்தில் முடியானது வறட்சியடைந்து, கரடுமுரடாக இருக்கும். அத்தகையதை நீக்க, வாரம் ஒருமுறை தவறாமல் தயிரைத் தடவி மசாஜ் செய்து உலர வைத்து அலச வேண்டும்.

Leave a Reply