shadow

airportபொதுவாக கடலின் நடுவே வெளிநாடுகளில்தான் விமான நிலையங்கள் இருக்கும் என நாம் அனைவரும் எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில் நமது நாட்டிலேயே இதுபோன்ற விமான நிலையம் ஒன்று இருப்பது பலருக்கு தெரிந்திருக்காது. ஆம் லட்சத்தீவில் உள்ள அகட்டி என்ற விமான நிலையம் கடலின் நடுவே உள்ளது.

இந்த விமான நிலையத்தின் ரன்வே நீளம், 1,204 மீட்டர்கள். அகலம், 360 மீட்டர்கள் மட்டுமே உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த விமான நிலையத்தில் பயணிகள் இறங்கியவுடன் கப்பல்கள் மூலம் மற்ற தீவுகளுக்கு செல்லலாம். இங்கு மொத்தம் 36 சின்னச்சின்ன தீவுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவுகள் மத்திய அரசால் இயங்கும் சுற்றுலா தளங்களில் மிகவும் முக்கியமானது.

விமானம் தரை இறங்கச் சற்று நிமிடங்களுக்கு முன் மட்டுமே இந்த விமானம் தெரியும். அந்த அளவிற்கு மிகச்சிறிய விமான நிலையமான இது கடந்த 1988ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது.  இந்தத் தீவுக்கு, பெங்களூரு, கொச்சியில் இருந்து சிறிய வகை விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply