நாம் செய்யும் ஒரு சில செயல்களினால் சரும அழகு கெட்டு விடும்.

அழகு வேண்டும் என்பதற்காக கண்டகண்ட க்ரீம்களை பயன்படுத்தாமல், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அழகை பெற முடியும்.

புகைப்பிடித்தல்
சருமத்திற்கு செய்யும் கெடுதலான விஷயங்களில் இதுவும் ஒன்று. புகைப்பிடித்தல் சருமத்திற்கான இரத்த ஓட்டத்தை தடுப்பதுடன், நேரடியான கெடுதலை ஏற்படுத்துகின்றது. அதிலும் இது சரும சுருக்கத்தையும், பொலிவற்ற தன்மையையும் ஏற்படுத்துகின்றது.

சுடுநீர்
உடலுக்கு புத்துணர்ச்சி கூட்டுவதற்காக எடுத்து கொள்ளப்படும் சுடுநீர் குளியல், சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

அதுவும் முகத்தில் இருக்கும் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். ஆகவே சுடுநீர் குளியல் அந்த மிருது தன்மையை போக்கி, பொலிவற்ற தன்மையை முகத்திற்குக் கொடுக்கின்றது. ஆகையால் சுடுநீர் குளியல் எடுத்து கொள்ளும் போது, முகத்தைக் காத்து கொள்ள வேண்டும்.

மது அருந்துதல்
வருடத்திற்கு சுமார் ஐந்தாயிரம் பேர் மது அருந்துவதால் புற்றுநோய்க்கு ஆளாகி இறக்கின்றனர் என்று ஆய்வு கூறுகின்றது.

அதிலும் மது அருந்தும் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இதனை அளவுக்கு அதிகமாக குடிப்பதால், சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் பசையைப் போக்கி, சரும வறட்சியை ஏற்படுத்தி, சருமத்தின் பொலிவை கெடுக்கின்றது.

இதனால் முகச் சருமத்தில் உள்ள இரத்தக்குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, சருமத்தில் பிளவை ஏற்படுத்தி, நிரந்தர ரணத்திற்கு வழிவகுக்கின்றது.

அழுக்கான மேக்-கப் ப்ரஷ்களை பயன்படுத்துவது
அழுக்கான மேக்-கப் ப்ரஷ்களை பயன்படுத்தினால் சருமத்தின் தன்மை பாழாகக் கூடும். எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது மெல்லிய ஷாம்புவைப் பயன்படுத்தி, ப்ரஷ்களை கழுவ வேண்டும். இதனால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, சருமத்தின் தன்மை காக்கப்படுகின்றது.

தூக்கமின்மை
சரியாக தூங்காவிட்டால் சருமமானது பாதிப்பிற்கு உள்ளாகும். மேலும் தோல் நிபுணர்கள் சொல்வது என்னவென்றால் ஒரு நாளைக்கு சரியாக எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

இல்லையென்றால் மன அழுத்தம் ஏற்படுவதுடன் சருமத்தின் பொலிவும் நீங்கிவிடும். அதுமட்டுமின்றி சருமத்தில் தேவையில்லாத அழற்சி ஏற்பட்டு சருமத்தின் மிருது தன்மை நீங்கிவிடும். எனவே சரியாக தூங்கி சருமத்தை பொலிவடையச் செய்ய வேண்டும்.

பருவை கிள்ளுவது
பருக்களை கிள்ளினால் பரு போய்விடும் என்பது இல்லை. அது தழும்பை ஏற்படுத்தி முகத்தின் அழகை கெடுக்கும்.

பருவை கிள்ளுவதால் பாக்டீரியா இன்னும் ஆழமாக முகத்தின் உள் சென்று, பருவின் ஆழத்தை கூட்டி முகத்தின் அழகை கெடுக்கும்.

இத்தகைய பருக்களைப் போக்குவதற்கு முகத்தை சுத்தமாக வைத்திருந்தாலே போதுமானது. எனவே அவ்வப்போது முகத்தை கழுவினால், பருவை போக்க முடியும்.

அடிக்கடி தொலைப்பேசியில் பேசுவது
முகத்தில் போனை அதிக நேரம் வைத்திருப்பதால், அதன் அதிர்வு முகத்தின் பொலிவை போக்கி பருக்களையும், தழும்புகளையும் ஏற்படுத்தி, முகத்தின் அழகை கெடுக்கின்றது என்று சமீபத்திய ஆய்வு கூறுகின்றது.

 

Leave a Reply