shadow

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 100 நாட்கள் ஆகிவிட்டதை அடுத்து இயக்குனர் நெல்சன் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்த புகைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், நெல்சன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் உள்ளனர்

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் விரைவில் முடிவடையும் என்றும் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.