shadow

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடக்குமா? மத்திய அரசுடன் பிசிசிஐ பேச்சு
cricket
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும் வகையில் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை இல்லாததால், இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் உலகக்கோப்பை போட்டி தவிர வேறு எந்த போட்டியிலும் மோதவில்லை.

இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சுற்றுப்பயண அட்டவணையின்படி, இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்டில் நடத்த வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தாலும் இந்த போட்டிக்கு இதுவரை மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பாகிஸ்தான் உடனான தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும், இதுகுறித்து கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், பா.ஜனதா எம்.பி.,யுமான அனுராக் தாக்கூர், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Leave a Reply