shadow

 dhoni and bravoஇந்தியாவுக்கு ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் இருபது ஓவர்கள் போட்டி என நீண்ட சுற்றுப்பயணம் செய்ய வந்த மேற்கிந்திய தீவுகள் அணி,  கிரிக்கெட் தொடரை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு திரும்பி சென்றதால் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து ரூ. 400 கோடி இழப்பீடு கோர பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்ப்படுகிறது.  இது தொடர்பாக ஐதராபாத்தில் நாளை நடைபெறும் பிசிசிஐ செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இந்திய அணியுடன் 5 ஒருநாள் போட்டி, ஒரு இருபது ஓவர் போட்டி மற்றும்  3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு வந்திருந்தது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களின் சம்பளப்பிரச்சனை காரணமாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் திடீரென போட்டியில் விளையாட மறுத்துவிட்டனர். இதையடுத்து தர்மசாலாவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியோடு இந்த தொடர் ரத்து செய்யப்பட்டது. இதனால் கடைசி ஒருநாள் போட்டி, இருபது ஓவர்கள் போட்டி, 3 டெஸ்ட் போட்டி என மொத்தம் 17 நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது. . எனினும் இந்தியா-இலங்கை இடையிலான 5 ஒருநாள் போட்டியின் மூலம் 5 நாட்கள் ஈடுகட்டப் பட்டாலும், எஞ்சிய 12 நாட்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளை யாடியபோது ஒரு போட்டியின் மூலம் ரூ.33 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதை அடிப்படை யாகக் கொண்டு 12 நாள் வரு வாய் இழப்பாக ரூ.396 கோடி கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டு தொகையை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ கேட்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply