ஆபாச பட இணையதளங்களை தடை செய்தால் விளைவுகள் ஏற்படும்: எச்சரிக்கை செய்வது யார் தெரியுமா?

இந்தியாவில் ஆபாச பட இணையதளங்களை தடை செய்தால் சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கும் என ஆபாச படங்களை தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

உத்தரகாண்ட் ஐகோர்ட் வெளியிட்ட உத்தரவு காரணமாக, நாட்டில் இதுவரை 827 ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஏற்படும் விளைவுகளை குறித்து கனடா நாட்டை சேர்ந்த ஆபாச பட தயாரிப்பு நிறுவனம் கூறியபோது, ‘இந்தியாவில் ஆபாச இணையதளங்களை தடை செய்தால், பயனர்கள் சட்டவிரோத இணையதளங்களை நாட அது வழிவைகை செய்யும் என்று கூறியுள்ளது.

கனடாவை சேர்ந்த குறிப்பிட்ட இந்த நிறுவனம், ஆபாச பட தயாரிப்பதில் உலகின் 29வது இடத்தில் உள்ளது. இந்த இணையதளத்தில் படங்களை பார்க்க நாடி வருபவர்களுக்கான பட்டியலில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *