shadow

இங்கிலாந்து நாட்டில் வாட்ஸ் அப்-க்கு தடையா? பொதுமக்கள் எதிர்ப்பு

whatsappஇங்கிலாந்து நாட்டில் சமீபகாலமாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாகி வருவதாகவும், தீவிரவாதிகள் சமூக வலைத்தளங்கள் மூலம் மிக எளிதாக தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொள்வதால், விரைவில் வாட்ஸ் அப் உள்பட ஒருசில சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் அண்மையில்  சமூக வலைத்தளங்களை கண்காணிக்க வகை செய்யும் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இணைய தொடர்பு வசதிகள் பயங்கரவாதிகள் எளிதாக தகவல் பறிமாறிக்கொள்ள ஏதுவாக இருப்பதாக இங்கிலாந்து புலனாய்வுத் துறை அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. எனவே  இந்த இணைய தொடர்புகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வர பிரெதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சட்டம் அமலுக்கு வந்தால் ஸ்நாப் சாட், ஆப்பிள் நிறுவனத்தின் ஐமெசேஜ், வாட்ஸ்-ஆப் போன்றவைகளுக்கு இங்கிலாந்தில் நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்கள் அனைத்தும் ஓராண்டுக்கு சேமிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்படும். இந்த புதிய சட்டம் மக்களின் தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply