shadow

வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை. ஏ.டி.எம் பணிகள் பாதிக்குமா?
bank
விஜயதசமி, ஆயுதபூஜை, மொஹரம் மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை வருவதால், வங்கிச்சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் காந்தி ஜெயந்தி, 2 சனிக்கிழமைகள், 4 ஞாயிற்றுக்கிழமைகள் என வங்கிக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில் ஆயுதபூஜை விடுமுறைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்தமே 20 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கின்றது.

மேலும் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையாக இருப்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்பும் வேலையை தனியார் ஏஜென்சிகள் செய்வதால், தொடர் விடுமுறை என்றாலும் ஏ.டி.எம். மையங்களில் பணம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படாது என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் இணையதள பரிமாற்றங்களும் தங்குதடையின்றி நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த 5 நாட்கள் விடுமுறை குறித்து வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் காசோலைகள், வரைவோலைகள் மட்டுமே இந்த விடுமுறையால தேக்கமடையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply