shadow

Rajinikanth_b_EPSகோச்சடையான் திரைப்படம் தயாரிக்க அப்படத்தின் தயாரிப்பாளர் சென்னையில் உள்ள ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் என்ற வங்கியில் ரூ.40 கோடி லோன் வாங்கியதாகவும், அந்த பணத்தை கட்டாததால், நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததாக செய்திகள் வெளிவந்துளன.

கோச்சடையான் திரைப்படத்தை தயாரித்த ஈராஸ் நிறுவனம், கடந்த ஆண்டு ஓரியண்டல் பேங்க ஆப் காமர்ஸ் வங்கியில் ரூ.40 கோடி லோன் வாங்கியிருந்ததாகவும், படத்தின் ரிலீஸுக்கு முன்னர் பணம் முழுவதையும் கட்டிவிடுவதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் உறுதி கூறப்பட்டதாகவும், ஆனால் பணத்தினை முழுவதும் கட்டாமல் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி செய்வதாகவும், வங்கியின் சார்பில் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட் நீதிமன்றம், கோச்சடையான் படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதித்துள்ளது. இதனால் வரும் 23ஆம் தேதி கோச்சடையான் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே படத்திற்கு பல சிக்கல்கள் இருப்பதால் அனைத்து சிக்கல்களையும் விடுவித்தபின்னர்தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்பதால் படக்குழுவினர் பயங்கர அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply