shadow

cricketவங்கதேசம் மற்றும் ஜிம்பாவே நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்க தேச அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஜிம்பாவே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதல் இன்னிங்ஸில் ஜிம்பாவே அணி 75.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையடிய வங்க தேச அணி, 98 ஓவர்களில் 254ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

cricket 1
முதல் இன்னிங்ஸில் 14 ரன்கள் பின் தங்கியிருந்த ஜிம்பாவே அணி இரண்டாவது இன்னிங்சில் 35.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 101 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 33.3 ஓஒவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் எடுத்து வங்கதேச அணியின் வெற்றிக்கு உதவிய தசூல் இஸ்லாம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி தொடங்குகிறது.

Leave a Reply