shadow

இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்:

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்றது

டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச தீர்மானித்ததால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது

215 என்ற கடின இலக்கை விரட்டிய வங்கதேசம் ஆச்சரியம் தரும் வகையில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியாவிடம் தோல்வி அடைந்த வங்கதேசம் விஸ்வரூபம் எடுத்து இலங்கை கொடுத்த இமாலய இலக்கை அடைந்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. 72 ரன்கள் அதிரடியாக எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த ரஹிம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றியை இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளது.

Leave a Reply