ஆசியா கோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் வெற்றி.
235301.3
ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் இலங்கை வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வங்கதேச அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட் அணியை தோற்கடித்தது.

டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட் அணி முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த வங்க தேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது.

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட் அணி 17.4 ஓவர்களில் வெறும் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த அணியின் ஒன்பது பேட்ஸ்மேன்கள்ஒற்றை இலக்க ரன்களே எடுத்தனர். அதிலும் மூன்று பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஜீரோவில் அவுட் ஆகினர்.

Bangladesh v United Arab Emirates. Bangladesh won by 51 runs

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *