shadow

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன்

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆறு முறை சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணி, வங்கதேச அணி எளிதில் வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த இறுதி போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பெளலிங் செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய வீராங்கனை கவுர் 56 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் 113 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி கடைசி பந்தில் 113 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 9 ரன்கள் அடிக்க வேண்டியிருந்த நிலையில் முதல் பந்தில் ஒரு ரன்னும், 2வது பந்தில் 4 ரன்களும் 3வது பந்தில் ஒரு ரன்னும் வங்கதேசம் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4வது மற்றும் 5வது பந்தில் விக்கெட்டுக்கள் விழுந்ததால் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஆலம் இரண்டு ரன்களை அடித்து அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்று தந்தார்.

Leave a Reply