shadow

தாய்லாந்தில் இந்து கோவில் அருகே குண்டுவெடிப்பு. 27 பேர் பரிதாப பலி

shadow

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் நேற்று இரவு நடந்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 27 பேர் பரிதாப உடல் சிதறி பலியாகினர். மேலும் 80 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு பிரதமர் மோடி உள்பட உலகத்தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய பாங்காக்கின் சில்டாம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு தெரு ஓன்றில் நேற்று இரவு 7 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. குண்டுவெடித்த இடத்தின் அருகே இந்து கோவில் ஒன்று உள்ளது என்றும் இந்த கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமின்றி புத்த மதத்தை பின்பற்றுபவர்களும் வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.

கோவில் மற்றும் வணிக வளாகம் அருகே நடந்த இந்த குண்டு வெடிப்பு காரணமாக அந்த பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் உள்பட 27 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் சுமார் 75க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் உடனடியாக மீட்புக்குழுவினரின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், குண்டு வெடித்த பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை நடத்தியதில் வெடிக்காத குண்டு கிடந்ததை அவர்கள் கண்டுபிடித்து அகற்றினர். அதேபோல், வணிக வளாகத்திற்கு எதிரே மற்றொரு குண்டும் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இந்த தகவலை ஆளும் ராணுவக் குழு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதுவரை இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை செய்து இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றும் தாய்லாந்தின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவே இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply