shadow

9ab

ஐ,.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடந்த விறுவிறுப்பான போட்டி ஒன்றில் பெங்களூர் அணியை ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியினர்களின் அபார பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 70 ரன்களில் சுருண்டது. கேப்டர் விராத் கோஹ்லி 21 ரன்களும், ஸ்டார்க் 18 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியின் டாம்பே 4 விக்கெட்டுக்களையும், ரிச்சர்டுசன் 2 விக்கெட்டுக்களையும், பின்னி,வாட்சன்,பாட்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் 71 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு 13 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 71 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரஹானே 23 ரன்களும், வாட்சன் 24 ரன்களும், எடுத்தனர். ராஜஸ்தான் அணியின் டாம்பே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply