shadow

மக்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து ரூ.2100 கோடி திட்டத்தை ரத்து செய்த கர்நாடக அரசு

நெடுவாசல் பகுதி மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதி மக்களும் கடந்த 15 நாட்களாக மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். ஆனால் தமிழக அரசும், மத்திய அரசும் இந்த போராட்டத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது. இந்நிலையில் மக்களின் எதிர்ப்பு காரணமாக ரூ.2100 கோடி திட்டம் ஒன்றை கர்நாடக அரசு ரத்து செய்துவிட்டது.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் ரூ.2,100 கோடி செலவில் 6.7 கிமீ நீளத்துக்கு நான்கு வழி கொண்டதாக இரும்பு மேம்பாலம் ஒன்றை கட்ட கர்நாடக அரசி திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த பெங்களூருவின் மையப்பகுதியில் உள்ள பசுமையான 800-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படும் என்றும், அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 20 ஆயிரம் மக்கள் வீடுகளை இழக்க நேரிடும் என்றும் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘பெங்களூரு உருக்கு மேம்பால திட்டத்தை கைவிடுவது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விரும்பாத திட்டம் எதையும் இந்த அரசு நிறைவேற்றாது’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply