பெங்களூரூ சாலையில் காவல் துறையினர் நிறுத்தி வைத்த பொம்மைகள்: ஏன் தெரியுமா?

பெங்களூரில் உள்ள முக்கிய சாலைகளில் ட்ராஃபிக் போலீஸ் உடை அணிந்த பொம்மைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது

பெங்களூரில் கடந்த சில நாட்களாக டிராபிக் போலீஸ் உடையுடன் முக்கிய சாலைகளில் பொம்மைகளை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்

இந்த பொம்மைகளை உண்மையான போலீஸ் என நினைத்து வாகன ஓட்டிகள் விதிகளை மீறாமல் வாகனத்தை ஓட்டி செல்வதாக கூறப்படுகிறது

ஆனால் ஒரு சில நாட்களில் இது பொம்மை என்று தெரிந்ததும் வழக்கம்போல் சாலை விதிகளை மீறுவார்கள் என்பதால் பொம்மைகள் நிற்கும் இடத்தில் அவ்வப்போது உண்மையான போலீஸை நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தூரத்திலிருந்து பார்க்கும்போது பொம்மையா? உண்மையான போலீஸ்காரரா? என்று தெரியாத வகையில் இருக்கும் என்றும், இதனால் விதிகளை மீறுபவர்கள் பயப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply