shadow

பெங்களூர் நாட்கள்’ திரைப்படத்திற்கு ‘யூ சர்டிபிகேட்
bangalore naatkal
கடந்த ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான புறம்போக்கு, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, இஞ்சி இடுப்பழகி ஆகிய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீசில் வசூல் செய்ய தவறிய நிலையில் தற்போது அவர் நம்பிக்கையுடன் இருக்கும் ஒரே படம் ‘பெங்களூர் நாட்கள் மட்டுமே. ஆர்யாவுடன் ராணா, பாபிசிம்ஹா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, சமந்தா, ராய்லட்சுமி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் நேற்று இந்த படம் இன்று சென்சார் அதிகாரிகளுக்கு திரையிடப்பட்டது.

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இந்த படம் ‘U’ சர்டிபிகேட் பெற்றுள்ளதால் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையை பெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளதால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிவிபி மகிழ்ச்சியில் உள்ளனர்.

‘பெங்களூர் நாட்கள்’ படம் சென்சார் செய்யப்பட்டதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 5 என திகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோபிசுந்தர் இசையமைத்திருக்கும் இந்த படத்தை பொம்மரில்லு பாஸ்கர் இயக்கியுள்ளார். பிவிபி நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆகிய ‘பெங்களூர் டேய்ஸ்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.

Leave a Reply