shadow

mamtaதேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஒரு கலெக்டர் மற்றும் 4 எஸ்.பிக்கள் உள்பட ஏழு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய மேற்குவங்க முதல்வர் ஒப்புக்கொண்டார். தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கைக்கு வேறு வழியின்று அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட ஏழு அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய மறுத்தால் சம்பந்த தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படும் அல்லது ஒத்தி வைக்கப்படும் என தேர்தல் ஆணையம் மிண்டும் எச்சரிக்கை விடுத்தது. தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கைக்கு நேற்று மாலை மம்தா பானர்ஜி பணிந்தார். சம்ம்ந்தப்பட்ட ஏழு அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய ஒப்புக்கொண்டார். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் அதே ஏழு அதிகாரிகளை பழையபடி அதே இடத்தில் பணிபுரிய ஆணையிடுவேன் என்றும் மம்தா கூறியுளார்.

ஏழு அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய முடியாது. முடிந்தால் முதல்வரை மாற்றிக்கொள்ளட்டும், அல்லது என்னை கைது செய்து கொள்ளட்டும் என்றும் வீராவேசமாக அறிக்கை விட்ட மம்தா, திடீரென பல்டி அடித்தது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கின்றது.

Leave a Reply