shadow

0a87cc3a-3e9c-4423-8cc0-25ed187c5538_S_secvpf

பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ள வாழைக்காய் வாயுத்தொல்லை, வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு தரும்.

வாழைக்காயில் உள்ள சத்துக்கள் :

ஆற்றல்- 89 கிலோ கலோரிகள், மொத்த கொழுப்பு – 0.3 கிராம், சோடியம் – 1 கிராம், கார்போஹைட்ரேட் – 23 கிராம், நார்ச்சத்து – 2.6 கிராம், சர்க்கரை – 12 கிராம், புரதம் – 1.1 கிராம், வைட்டமின் ஏ – 3.00 மைக்ரோகிராம், வைட்டமின் பி6 – 0.367மி.கி.,

வைட்டமின் சி – 8.7மி.கி., வைட்டமின் இ – 0.10மி.கி, வைட்டமின் கே – 0.5 மைக்ரோகிராம், வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடியது.

இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. மாவுச்சத்து அதிகம் இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். 90 நிமிட உடற்பயிற்சிக்குப் பிறகு தேவைப்படுகிற ஆற்றலை

வாழைப்பழங்களின் மூலம் பெற்றுவிட முடியும்.

வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து ரத்தசோகையை விரட்டக் கூடியது. ஆப்பிளைவிட 4 மடங்கு அதிக புரதம், 2 மடங்கு கார்போஹைட்ரேட், 3 மடங்கு அதிக பாஸ்பரஸ், 5 மடங்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து, 2 மடங்கு அதிகமான வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளைக் கொண்டது வாழைப்பழம்.

கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள் வாழைக்காய், வாழைப்பழத்தைத் தொடவே கூடாது. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் அளவோடு எடுத்துக் கொள்வதில் ஆபத்தில்லை.

Leave a Reply