shadow

அஜீத்-பாலா சந்திப்பில் நடந்தது என்ன? புதிய தகவல்
bala
பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தில் ஆர்யா சிறப்பாக நடித்திருந்தாலும், முதலில் இந்த கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமானவர் அஜீத் என்பது அனைவரும் அறிந்ததே. பின்னர் எதிர்பாராத சில காரணங்களால் அஜீத் இந்த படத்தில் இருந்து விலகினார். இதனால் ஆத்திரமடைந்த இயக்குனர் பாலா, அஜீத்தை ஆள் வைத்து மிரட்டியதாகவும், அடித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இதை பலமுறை தனது பேட்டிகளில் பாலா மறுத்துள்ளார் எனினும் இதுகுறித்து ஊடகங்கள் இன்று வரை பேசிக்கொண்டுதான் இருக்கின்றது.

இந்நிலையில் அஜீத்தும் பாலாவும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நேருக்கு நேர் எதிர்பாராமல் சந்தித்ததாக கூறப்படுகிறது. பாலாவின் தாரை தப்பட்டை’ திரைப்படத்தின் டப்பிங் பணி ஜெமினி லேபில் நடந்து வருகிறது. இதே ஜெமினி லேபில் அஜீத்தின் ‘வேதாளம்’ படத்தின் டிஜிட்டல் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜெமினி லேபில் அஜீத்தும் பாலாவும் எதிர்பாராத நிலையில் சந்தித்து கொண்டதாகவும், ஆனால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *