shadow

7f0a4ff9-5918-4c25-acf7-38329f4235aa_S_secvpf

பெண்களுக்கு உள்ள பெரிய பிரச்சனைகளுள் ஒன்று முகத்தில் வரும் கரும்புள்ளிகள். கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகளுக்கு உடனடி தீர்வு தரக்கூடியது தான் பேக்கிங் சோடா பேக்கிங் சோடா அந்த கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகளை வேரோடு வெளியேற்றி, இறந்த செல்களையும் நீக்கிவிடும்.

* 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவில், சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவி, உலர்ந்ததும் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவ வேண்டும்.

* 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து, கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்களுக்கு இப்பிரச்சனை அதிகம் இருந்தால், வாரத்திற்கு 2 முறை செய்து வரலாம்.

* பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து வர, எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் அமிலம் விரைவில் கரும்புள்ளிகள் வெளியேறச் செய்யும். ஆனால் இம்முறை சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றதல்ல. – இந்த முறைகளில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை பயன்படுத்தி சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கலாம்.

Leave a Reply