shadow

சுந்தர் சி படத்திற்காக ஒப்பந்தமான ‘பாஜ்ராங்கி பைஜான்’ ஒளிப்பதிவாளர்

sundarc‘பாகுபலி’ மற்றும் ‘2.0’ படங்களுக்கு இணையாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள மிகப்பெரிய பட்ஜெட் படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் இளையதளபதி விஜய் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. விஜய் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றே தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டெக்னீஷியன்கள் ஒவ்வொருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர். சங்கமித்ரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் முதலில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் சாபு சிரில் கலை இயக்குனராகவும், கமலக்கண்ணன் கிராபிக்ஸ் டிசைனராகவும் பணிபுரிய ஒப்பந்தம் ஆனார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவு இயக்குனராக பாலிவுட்டின் பிரபல ஒளிப்பதிவாளர் அசீம் மிஸ்ரா ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே பாலிவுட்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘பாஜ்ராங்கி பைஜான்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் அடுத்தகட்டமாக இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தேர்வு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply