shadow

ரஜினியை நெருங்கிவிட்ட விஜய் பட வியாபாரம்

bairava-5விஜய், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கி வரும் ‘பைரவா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமைகளின் வியாபாரம் மிகப்பெரிய தொகைக்கு நடந்து வருகிறது.

‘பைரவா’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை மூன்று நிறுவனங்கள் இணைந்து பெற்றுள்ளன.

8K மைல்ஸ் மீடியா நிறுவனம், B&B எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் டெண்ட்கொடா நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாகவும், ரஜினி படங்களை அடுத்து இந்த படம்தான் அமெரிக்காவில் மிகப்பெரிய தொகைக்கு விலைபோன படம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply