நெல்லை ‘பைரவா’ படப்பிடிப்பில் பயங்கர வன்முறை. ஆட்டோ எரிந்து நாசம்

nellai1இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் நிலையில் ஒருசில காட்சிகளின் படபிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாக படக்குழுவினர் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை நெல்லை ரயில்வே நிலையம் அருகே ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் நெல்லையில் பந்த் நடப்பது போன்ற காட்சியை இயக்குனர் பரதன் இயக்கினார். இந்த பந்த்தில் வன்முறை நிகழ்வது போலவும், இதன் காரணமாக ஒரு ஆட்டோ தீப்பற்றி எரிவது போன்ற காட்சியையும் அவர் படமாக்கினார்.

இன்னும் ஓரிரண்டு காட்சிகள் மட்டுமே படமாக்கவேண்டியதுள்ளதாகவும், வரும் 10ஆம் தேதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிடும் என்றும் இயக்குனர் பரதன் நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *