shadow

shadow

சுமார் 250 கோடி ரூபாயில் இரு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பாகுபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 10 என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு நேற்று சென்சார் செய்யப்பட்டு படத்திற்கு யூ/ஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த படம் தமிழ்,தெலுங்கு, இந்தி, மலையாளம், என நான்கு மொழிகளில் உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பின் சென்சார் இந்த வார இறுதியில் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் தமிழ் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா ஷெட்டி, பிரபாஸ், ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவானி இசையமைத்துள்ளார். நான் ஈ, மகதீரா போன்ற வெற்றி படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தமிழில் ஸ்டுடியோ க்ரீன் என்ற நிறுவனம் வெளியிடுகிறது.

Leave a Reply