shadow

எந்திரன் சாதனையை 9 நாட்களில் முறியடித்தது ‘பாகுபலி’

enthiranசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பிரமாண்ட திரைப்படமான எந்திரன் படம்தான் இதுவரை தென்னிந்தியாவில் அதிக வசூல் செய்த படமாக இருந்த நிலையில் அந்த சாதனையை எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி, வெறும் ஒன்பதே நாட்களில் முறியடித்துள்ளது. அதுமட்டுமின்றி ரூ.500 கோடி வரை இந்த படம் வசூல் செய்யும் என விநியோகிஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘எந்திரன் திரைப்படம் மொத்தம் ரூ.290 கோடி வசூல் செய்தது. ஆனால் சமீபத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் வெளியான ஒன்பதே நாட்களில் ரூ.303 கோடி வசூல் செய்து எந்திரன் சாதனையை மிக எளிதில் முறியடித்துவிட்டது.

மேலும் உலகம் முழுவதும் இன்னும் அதிகளவான தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தின் சாதனையை பல வருடங்களுக்கு வேறு எந்த படமும் முறியடிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்த இந்த படம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply