shadow

பாகுபலி 2′ படம் குறித்த ரன்னிங் டைம் உண்மையா?

bahubaliஇந்தியாவின் பிரம்மாண்ட திரைப்படங்களில் ஒன்றாக போற்றப்பட்டு வரும் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பாகுபலி’ உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘பாகுபலி 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறாது. இந்த படத்தின் 80% படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டதாகவும், வரும் நவம்பரில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலும் முடிவடைந்து அதன்பின்னர் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘பாகுபலி 2’ படத்தின் ரன்னிங் டைம் குறித்த செய்திகள் இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்த படம் வெறும் 105 நிமிடங்கள் மட்டுமே அதாவது ஒரு மணி நேரம் 45 நிமிடங்களே ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முதல் பாகத்தோடு ஒப்பிட்டும்போது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த படத்தின் குறைவு என்றும் கூறப்படுகிறது.

‘பாகுபலி 2’ படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது படக்குழுவினர்களால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது இல்லை என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இந்த படத்தின் கிளைமாக்ஸ் போர்க்காட்சியே 30 நிமிடங்கள் இருக்கின்றது என்பது உறுதியாகியுள்ள நிலையில் முழுப்படமும் 105 நிமிடங்கள் என்பது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா? என்பதை படம் வெளியாகும்தான் தெரியவரும்.

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ண்னன் உள்ளிட்ட பலர் நடித்துள்ல இந்த படம் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ல் வெளியாகவுள்ளது.

Leave a Reply