shadow

Saina Nehwal Cute (12)உலக பேட்மிண்டன் தரவரிசையில் மகளிர் பிரிவில் முதன் முறையாக முதலிடம் பிடித்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு இந்திய பிரபல தலைவர்களிடம் இருந்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்திய வீராங்கனை ஒருவர் பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லியில் தற்போது நடைபெற்று வரும் இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் நேற்று ராட்சனாக் இண்டனான் என்பவர் கரோலினா மாரின் என்பவரை வீழ்த்தியதால் சாய்னா நெவால் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் ஜப்பான் வீராங்கனை யுயி ஹாஷிமோட்டோவுடன் சாய்னா நெவால்  அரையிறுதி போட்டியில் விளையாட உள்ளார். ஆனால், இந்தப் போட்டிக்கு முன்பே உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் சாய்னா நெவால் பிடித்துவிட்டார்.

இதுகுறித்து சாய்னா நெவால் செய்தியாளர்களிடம் கூறியபோது, “எல்லா போட்டித் தொடர்களிலும் பங்கேற்று அனைத்திலும் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துகிறேன்.

என்னைத் தோற்கடித்த வீராங்கனைகளை வெற்றி பெற விரும்புகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக தோல்வி அடைந்தது போல் தோல்வியடைய விரும்பவில்லை. நான் சீராக வெற்றி பெற விரும்புகிறேன், வெற்றிகள் குவியும் போது தரவரிசை என்னும் சாதனையும் பின் தொடர்வது இயற்கை.

கடந்த 7 ஆண்டுகளாக முதல் 5 இடங்களில் என்னைத் தக்கவைப்பது மிகக் கடினமாக இருந்தது. நான் இதனை இன்னும் சில காலங்களுக்கு தக்கவைக்க நினைக்கிறேன். சிறந்த வீராங்கனையாக இருக்கவே விரும்புகிறேன். உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்த விரும்புகிறேன்” இவ்வாறு சாய்னா நெவால் கூறியுள்ளார்.

Leave a Reply