shadow

rajini-lakshmiசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பரும், பிரபல தெலுங்கு நடிகருமாகிய மோகன்பாபுவின் மகள் மஞ்சு லட்சுமிக்கு இன்று காலை பெண்குழந்தை பிறந்துள்ளது.

மோகன்பாபுவின் மகளான மஞ்சுலட்சுமி நடிகை, பாடகி, தயாரிப்பாளர் போன்ற பணிகளில் பிசியாக ஈடுபட்டுக்கொண்டிருப்பவர். இவருக்கு கடந்த 2006ஆம் ஆண்டு ஸ்ரீனிவாசன் என்பவரோடு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்னரும் சினிமாத்துறையில் பிசியாக இருந்த மஞ்சுலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமானார். இந்நிலையில் அவருக்கு இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை மூன்று கிலோ எடையுள்ளதாகவும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் இருப்பதாக மோகன்பாபு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இன்று மஞ்சுலட்சுமியின் கணவர் ஸ்ரீனிவாசனின் பிறந்தநாள் ஆகும். கணவரின் பிறந்த நாளில் மகள் பிறந்தது தனக்கு இரட்டிப்பு சந்தோஷம் என மஞ்சுலட்சுமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் மோகன்பாபுவின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த், மஞ்சுலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மஞ்சு லட்சுமியும் எனக்கு மகள் போன்றவர்தான். எனவே எனது பேத்திக்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply