shadow

3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அடிபடாமல் தப்பிய அதிசயம்: ஆச்சரிய வீடியோ

3வது மாடியில் இருந்து விழுந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று எந்த காயமும் படாமல் உயிர் தப்பியது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

டாமன் டையூ யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் மூன்றாவது மாடியில் இருந்து ஒன்றரை வயது குழந்தை திடீரென தவறி விழுந்தது. ஆனால் அந்த குழந்தை இரண்டாவது மாடியில் உள்ள ஜன்னலில் சிக்கிக்கொண்டது

இதை கீழே இருந்து பார்த்த பொதுமக்கள் பதறினர். அந்த நேரம் ஜன்னலில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய குழந்தை சில நிமிடங்களில் கீழே விழுந்தது. அப்போது கீழே இருந்த பொதுமக்கள் அந்த குழந்தையை லாவகமாக பிடித்தனர். இதனால் குழந்தைக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் உயிர் தப்பியது. குழந்தையின் பெற்றோர், காப்பாற்றிய பொதுமக்களிடம் நன்றி தெரிவித்தனர்.

இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தையை அதிர்ஷ்டக்கார குழந்தை என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *