shadow

சூரிய கிரகணத்தில் பிறந்த குழந்தைக்கு எக்லிப்ஸ் என பெயர் வைத்த அமெரிக்க தம்பதி

அமெரிக்காவில் கடந்த 90 ஆண்டுகளுக்கு பின்னர் முழு சூரிய கிரகணம் தெரிந்த நிலையில் சூரிய கிரகணம் தினத்தில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு கிரகணத்தின் ஞாபகம் காரணமாக ‘எக்லிப்ஸ்’ என்ற பெயரை வைத்துள்ளனர்.

அமெரிக்கா முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூரிய கிரகணம் முழு அளவில் தெரிந்தது. இதனால் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்

இந்த நிலையில் கிரகணம் நடைபெற்று கொண்டிருக்கும்போதே பிறந்த குழந்தைக்கு ‘எக்லிப்ஸ்’ என்ற பெயரை அந்த குழந்தையின் பெற்றோர்கள் வைத்தனர். இந்த குழந்தைக்கு மருத்துவமனையின் நிர்வாகம் சிறப்பு பரிசு வழங்கி வாழ்த்தியது. அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் சமூக வலைத்தளம் மூலம் குழந்தைக்கு பாராட்டு தெரிவித்தனர்

Leave a Reply