shadow

‘பாகுபலி 2’ படத்துடன் கனெக்சன் ஆன ‘பைரவா’

இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்த ஸ்ரீக்ரீன் நிறுவனம் அடுத்து உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘பாகுபலி 2’ படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

ரஜினி படத்தை அடுத்து தமிழகத்தில் மிக அதிக தொகைக்கு விற்பனை ஆனது என்ற பெருமையை பாகுபலி 2 திரைப்படம் பெற்றுள்ளது. வரும் ஏப்ரல் 28ஆம் தேதி தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிக திரையரங்குகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ராணா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கியுள்ளார்.

Leave a Reply