shadow

veterinary_2

சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில், பி.டெக் படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பி.டெக்.,டைரி டெக்னாலஜி படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான அங்கீகாரம் பெற்ற கல்வியை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை www.tnuvas.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பொதுப்பிரிவினர் ரூ.600ம், சிறப்பு பிரிவினர் ரூ.300ம் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.

நவம்பர் 24ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும்படி அனுப்பலாம். கூடுதல் தகவல்களுக்கு www.tanvas.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply