B.Ed தேர்வு முடிவுகள் வெளியீடு: இணையதளத்தில் பார்ப்பது எப்படி?

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி என்ற B.Ed தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த தேர்வை எழுதியவர்கள் தங்கள் பதிவு எண் மூலமாக தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் (B.Ed ) பெருமளவில் மாணவ, மாணவிகள் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும், மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள tnteu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை எப்படி பெறுவது? என்பதை தற்போது பார்ப்போம். முதலில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU)இன் இணையதளமான tnteu.ac.in என்ற இணையதளத்திற்குள் செல்லவும்.

அதன்பின்னர் TNTEU B.Sc B.Ed March result 2019 என்ற லிங்க்கை கிளிக் செய்யவும். அதில் தேர்வு முடிவுகளின் பக்கம் தோன்றும். அதில், தேர்வர்கள் தங்கள் பதிவு எண்ணைப் பதிவு செய்து தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply