Chennai Today News

சென்னையில் ஏ.வி.எம். அகாடமி கிரிக்கெட் போட்டி

ஏ.வி.எம். அகாடமி சார்பில் அகாடமிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி சென்னையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஐந்தாவது ஆண்டு அகாடமி கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது.

இதில் 12 மற்றும் 13 வயதுக்குட்பட்டோருக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் எட்டு அணிகள் மற்ற அணிகளுடன் மோதும். லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெறும். இருபது ஓவர் போட்டிகளாக நடத்தப்படும் இந்தபோட்டிகளின் இறுதி ஆட்டம் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சுழற்கோப்பையும், சிறந்த வீரர், தொடர் நாயகன் ஆகியோருக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் ஏ.வி.எம். அகாடமி சார்பில் வழங்கப்படும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!