தேர்தல் கணிப்பு தவறானதால் புத்தகத்தை கடித்து தின்ற எழுத்தாளர்

சமீபத்தில் நடைபெற்ற பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் குறித்து பிரபல எழுத்தாளர் மேத்யூ குட்வின் என்பவர் தனது கருத்துக்கணிப்பு குறித்து ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டிருந்தார். இந்த தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு, 38 சதவீதத்துக்கு குறைவான ஓட்டுகளே கிடைக்கும் கிடைக்கும் என்றும் தன்னுடைய கணிப்பு தவறானால் தான் எழுதிய இந்த புத்தகத்தை கடித்து தின்பேன் என்றும் அவர் கூறியிருந்தார்

இந்நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 40.3 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. இதனால் எழுத்தாளர் மேத்யூவின் கணிப்பு பொய்யானது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் மேத்யூ பயங்கரமாக கிண்டலடிக்கப்பட்டதோடு எப்போது புத்தகத்தை திங்கும் நிகழ்ச்சி என்றும் கலாய்த்தனர்.

இந்த நிலையில் தனியார் டிவியின் நேரடி நிகழ்ச்சியில் தோன்றிய மேத்யூ ‘என் கணிப்புக்கு மாறாக, 2 சதவீத ஓட்டுகளை, தொழிலாளர் கட்சி அதிகம் பெற்றுள்ளது. எனவே நான் சொன்னபடி நான் எழுதிய புத்தகத்தை தின்று விடுகிறேன்’ என்று கூறிய மேத்யூ புத்தகத்தை கடித்து முழுங்கினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *