டைட்டான ஜீன்ஸ் அணிந்த பெண்ணின் கால்கள் முடக்கம். ஆஸ்திரேலியாவில் விபரீதம்

skinny jeansதற்போதைய இளம்பெண்களிடையே மிகவும் டைட்டான ஜீன்ஸ் போன்ற உடைகள் அணியும் கலாச்சாரம் பெருகி வருகிறது. இவ்வகையான உடைகள் அணிவதால் கால்களில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் என மருத்துவர்கள் பலமுறை எச்சரிக்கை செய்திருந்தும் பெண்கள் அதை கண்டுகொள்வதில்லை. நேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு இளம்பெண் டைட்டான ஜீன்ஸ் அணிந்திருந்த காரணத்தால் ரத்த ஓட்டம் தடைபட்டு இரவு முழுவதும் சாலையில் விழுந்து கிடந்தார். பின்னர் அதிகாலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் டைட்டான ஜீன்ஸ் அணிந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் திடீரென கால்களில் உணர்ச்சியை இழந்து கீழே விழுந்த அவரால், மீண்டும் எழுந்திருக்க முடியவில்லை. இரவு நேரம் என்பதால் சாலையில் விழுந்து கிடந்த யாரும் அவரை கவனிக்கவில்லை.

பின்னர் அதிகாலையில் அந்த பெண்ணை கவனித்த அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.   பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்த நரம்பியல் வல்லுநர் தாமஸ் டிம்பர் என்ற மருத்துவர் இதுகுறித்து கூறியபோது “அந்தப் பெண் மருத்துவமனைக்கு வரும்போது மிகவும் மோசமான நிலையில் இருந்தார். அவரது இரண்டு கால்களின் கெண்டைத் தசைகள் கடுமையான வீக்கத்துடன் இருந்தது. எங்களால் அவரது ஜீன்ஸை கிழித்தே அகற்ற முடிந்தது. முட்டிக்கு கீழே அவரது கால்களில் உணர்ச்சியே இல்லை.

உடலையொட்டி டைட்டான ஜீன்ஸ் அணிவதே இதற்கு காரணம். கால்களில் ரத்தஓட்டம் தடைப்பட்டதால் தசைகள் இறுகி, கால்களின் நரம்புகளில் ஏற்பட்ட அழுத்தம் தான் இதற்கு காரணம். ஸ்கின்னி ஜீன்ஸை அணியும் பெண்கள் நீண்ட நேரம் உட்காரக் கூடாது. நாள்பட்ட நிலையில் இவ்வாறான பாதிப்பு ஏற்படலாம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *